மதுரை மாவட்டம், அலங்கா நல்லூரில் மழைக்காக கழுதை களுக்கு திருமணம் நடத்தி விநோதமாக வேண்டுதல் வைத்தனர்.
அலங்காநல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் போதிய மழையின்றி கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பேரூ ராட்சி மூலம் குடிநீர் விநி யோகம் செய்துவந்தாலும், பொது மக்களுக்குத் தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் ஒரு குடம் ரூ.5-க்கு விற்கப்படுகிறது. இத ற்காக அலங்காநல்லூர் கிரா மத்தினர் மழைக்காக பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை, யாகம் நடத்தினர். இந்நிலையில், கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை அடிப்படையில், இந்த விநோத நிகழ்ச்சியை அவர்கள் நடத்தினர்.
அலங்காநல்லூர் காளியம்மன் கோயில் அருகே மணப்பந்தல் அமைத்தனர். ஆண்,பெண் கழுதைகளுக்கு மணமக்களை போன்று அலங்காரம் செய்து நிறுத்தினர்.
பின்னர் மங்கள இசை முழங்க பெரியவர் ஒருவர் பெண் கழுதை கழுத்தில் தாலி கட்டினார். அப்போது கூடிநின்ற மக்கள் அட்சதை தூவி மழைவேண்டி வழிபட்டனர். இத ற்கான ஏற்பாடுகளை இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.