தமிழகம்

திரையரங்க வாசலில் ரவுடிக்கு வெட்டு: 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை

செய்திப்பிரிவு

ராயப்பேட்டை உட்லண்ஸ் திரை யரங்க வாசலில் ரவுடியை சரிமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு, மர்ம நபர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீஸார் தேடு கின்றனர். படுகாயம் அடைந்த ரவுடி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவான்மியூர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாலா என்ற பாலகிருஷ்ணன் (29). ரவுடியான இவர் மீது திருவான்மியூர் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இவர் கஞ்சா வியாபாரி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் நேற்று மதியம் சினிமா பார்ப்பதற்காக ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ஸ் திரையரங்கத்துக்கு சென்றுள்ளார். மதியம் 2.10 மணி அளவில் திரையரங்க வாசலில் நின்றிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளது. அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் விழுந்த நிலையில், ரத்த வெள் ளத்தில் பாலகிருஷ்ணன் உயிருக் காகப் போராடினார். அருகே இருந்தவர்கள் ஓடி வருவதற்குள், மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தது.

தகவல் அறிந்து ராயப்பேட்டை போலீஸார் விரைந்து வந்தனர். பாலகிருஷ்ணனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் சென்னை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல ரவுடியான நொண்டி முருகன் என்ற முருகன் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து முன் விரோதத்தில் பாலகிருஷ்ணனை வெட்டியுள்ளார் என்று போலீ ஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

          
SCROLL FOR NEXT