தமிழகம்

வரும் 23-ம் தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது

செய்திப்பிரிவு

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையமான தாயகத்தில் கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT