தமிழகம்

திருமலையில் பலியான இருவருக்கு தேவஸ்தானம் ரூ.8 லட்சம் இழப்பீடு

செய்திப்பிரிவு

திருமலையில் நேற்று முன் தினம் இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 8 லட்சம் வழங்குவதாக தேவஸ்தானம் நேற்று அறிவித்தது.

திருமலையில் நேற்று முன் தினம் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் இரவு 8 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், ராமஞ்சேரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி லஷ்மி (37), அவரது ஒன்றரை வயது மகன் மகேஷ் ஆகியோர் தரிசன வரிசையில் காத்திருந்தபோது மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்ட திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 8 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT