குற்றப்பின்னணி உடையவர் களுக்கு அரசு செலவில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருமங்கலம் அருகே உள்ள எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த வர் அதிமுக நிர்வாகி எஸ்.பி.சர வணன். இவர் மீது 2015-ல் குகன் என்பவரை கொலை செய்ததாக வில்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தனக்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சரவணன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிர காஷ் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. மதுரை மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி தாக் கல் செய்த பதில் மனு:
மனுதாரர் குற்றப் பின்னணி உடையவர். அவரது வீட்டின் முன் போலீஸ் கண்காணிப் புக்கு ஏற்கெனவே உத்தரவிடப் பட்டுள்ளது. அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கினால் அதை வைத்து அவர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடவும், சாட்சிகளை மிரட்ட வும், கிராமத்தினர் மத்தியில் தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தவும் முயற்சிப்பார்.
மனுதாரர் மீது நிலுவையில் உள்ள கொலை வழக்கின் விசார ணையை திசை திருப்பும் நோக்கத் தில் பாதுகாப்பு கோரியுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி பிறப் பித்த உத்தரவு: ஒருவர் அமைதி யாக வாழ்வது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். ஒருவர் அமைதியாக வாழ்வது என்பதில் மற்றவர்களும் அமைதியாக வாழ வேண்டும் என்றும் உள்ளது. எப்போதும் வினை விதைத்தவன் வினை அறுப்பான். இதனால் குற்றப்பின்னணி உள்ள ஒருவ ருக்கு அரசு செலவில் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது. மனுதாரர் தனக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்புக்கான செலவை தானே பார்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அதை ஏற்க முடியாது. மனுதாரர் குடியிருந்து வரும் பகுதியை போலீஸார் ஏற்கெனவே கண்காணித்து வரு கின்றனர். இது போதுமானது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.