தமிழகம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 23-ம் தேதி வரை மனு அளிக்கலாம்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத் தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 16-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி அடங்கியுள்ள சென்னை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தும் அலுவல ராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குநர் தி.நா.பத்மஜாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். தண்டை யார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் செயல்படு கிறது.

தேர்தல் ஆணையம் அறி வித்தபடி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி 23-ம் தேதி முடிகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் தினமும் காலை 11 முதல் மாலை 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனு படிவத்தை தேர்தல் ஆணை யத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய லாம். தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். மனுவுடன், பொது வேட்பாளராக இருப்பின் ரூ.10 ஆயிரமும், எஸ்சி, எஸ்டி வேட்பாளராக இருப்பின் ரூ.5 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

வேட்புமனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்கள், தங்கள் கட்சியின் பரிந்துரை படிவத்தை இணைக்க வேண்டும். வேட்பா ளரின் அஞ்சல் தலை அளவு புகைப்படத்தை தனியாக அளிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT