கடலூர் மாவட்டத்தில் கால் நடைகளுக்கு கோமாரி நோய் தீவிரமாகப் பரவிவருவதால், உடனடியாக சிறப்பு மருத்துவ முகாம்களை கிராமம் தோறும் நடத்தவேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பாசன பாதுகாப்பு சங்கத் துணைத்தலைவரும், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினருமான வி.கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: கோமாரி நோய் தாக்குதலால் நாகை மற்றும் தஞ்சையில் கால்நடைகள் இறந்து வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
விவசாயிகள் நெற்பயிர்களுக்கு அதிக அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதன் எதிரொலியாக வைக்கோலில் விஷத்தன்மை ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இதில் தீவிர கவ னம் செலுத்தவேண்டும். இன்று கால்நடைகளை தாக்கிய நோய், நாளை வேறொரு வடிவில் மனிதர்க
ளையும் தாக்கும் சூழல் எழும், எனவே கால்நடை ஆராய்ச்சி யாளர்களும், மருத்துவர்களும் சிறப்பு கவனம் செலுத்தி, சிறப்பு முகாம்கள் நடத்தி நோய்க்கான காரணத்தைக் கண்ட
றிவதுடன்,அனைத்துக் கால்நடைக ளுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்று கண்ணன் கூறினார்.