‘இரட்டை இலை’ சின்னத்துக்கு ஓபிஎஸ், சசிகலா என இரு தரப்பினரும் உரிமை கோருவதால், இரு தரப்பும் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதில் சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத் தைப் பெற இரு அணியினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தும், நேரில் விளக்கியும் வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதன னுக்கே ‘இரட்டை இலை’ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் நேற்று ஒரு மனு அளித்தார். அதில், ‘‘அதிமுக சட்டவிதிகளின்படி கட்சி யின் அவைத் தலைவரும், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரு மான மதுசூதனனுக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு தரப்பின ரும் தங்கள் தரப்பு வாதங்களை 20-ம் தேதிக்குள் எழுத்துமூலமாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பினரும் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவல கத்தில் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியு ள்ளது.
1989 தேர்தல் சரித்திரம்
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, 1989-ல் அதிமுக இரண் டாகப் பிளவுபட்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணியாக தேர்த லைச் சந்தித்தபோது, இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணி யினரும் உரிமை கொண்டாடினர். அதனால், இரட்டை இலை சின்னத்தை முடக்கிவைத்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. இப்போதும் இரட்டை இலை சின்னத்தைப் பெற சசிகலா ஓபிஎஸ் அணியினர் இடையே கடும் போட்டி நிலவு கிறது. இரு அணியில் யாராவது ஒருவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா? 1989-ம் ஆண்டு தேர்தல் சரித்திரம் திரும்புமா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.