தமிழக அரசின் உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''விடுப்பில் சென்றுள்ள தமிழக உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார். உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு, வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டு இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.