தமிழகம்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்

செய்திப்பிரிவு

திமுக பொருளாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் தனது கொளத்தூர் தொகு தியில் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

காலை 10 மணிக்கு நுங்கம் பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகே அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து கொளத்தூர் தொகுதிக்கு வந்த அவர், 67-வது வட்டத்தில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை, தமிழக அரசு பொது நூலகம், 64-வது வட்டத்தில் உள்ள சென்னை மேல் நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை யும் பெற்றுக்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கொளத்தூர் தொகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள், நூலகம், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் ஆய்வு மேற் கொண்டேன். எனது தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினை கள் குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து வருகிறேன்.

67-வது வட்டத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மாணவிகளின் பாது காப்புக்காக காவல் உதவி மையம் அமைக்க வேண்டும். கணினி வசதி செய்து தர வேண்டும். பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என மாணவிகளும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், மருத்துவப் பணியாளர் குடியிருப்பை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியார் நகரில் உள்ள அரசு பொது நூலகத்தில் 90 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, அங்கு கழிப்பிட வசதி, சிறுவர் விளையாட்டுத் திடல், பூங்கா ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்களுக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்க முடியுமோ அதற்கு நிதி ஒதுக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன். மக்களின் கோரிக் கைகளை அதிகாரிகள் விரைவாக முடித்துத் தர வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT