சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தொலைத்தூர கல்வி மையத்தில் மேலும், 4 புதிய முதுகலை பட்டயப் படிப்புகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இங்கு 5 ஆண்டு, 3 ஆண்டு சட்டப் படிப்புகள் உள்ளன. இது தவிர, சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்பும், 7 வகையான முதுநிலை சட்டப் படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்க ழகத்தின் தொலைத்தூர கல்வி மையத்தில் மேலும், 4 புதிய முதுகலை பட்டயப் படிப்புகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இது குறித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கூறியதா வது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைத்தூர கல்வி மையத்தில் வணிக சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், தொழிலாளர்கள் சட்டம் உள்பட மொத்தம் 6 வகையான பட்டயப் படிப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வருட கால படிப்பு மற்றும் 6 மாத கால சான்றிதழ் படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கல்வியல் சட்டம், கடல்சார் சட்டம், காப்பீடு சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் ஆகியவற்றில் 4 புதிய பட்டயப் படிப்புகளை தொடங்கதிட்டமிட்டுள்ளோம். இதற்கான முழு முயற்சியில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த படிப்புகள் வேலைவாய்ப்புகளை பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சட்டம் படித்த வர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்டதாரிகளும் இதை படித்து பயன்பெறலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.