தமிழகம்

எவ்வித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய கருணாநிதி கோரிக்கை

செய்திப்பிரிவு

எவ்வித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக தலை வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் கடன் தள்ளு படி ஆளுங்கட்சியினருக்கே தரப் படுவதாவும், உண்மையான விவசாயிகளுக்கு தள்ளுபடி கிடைக்கவில்லை என்றும் பரவலாக புகார் கூறப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற் றுள்ள, தகுதியுள்ள விவசாயிகளை கண்டறிந்து அவர்களின் கடன் களை தள்ளுபடி செய்ய பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆனால், இவற்றை பின்பற்றாமல் பயனாளிகள் பட்டி யலை அந்தந்த கூட்டுறவு சங்சங்கள் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. எவ்வித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் அதை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற் கத்தக்கது. குற்றப் புலனாய்வு நட வடிக்கைகளின் தரத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்த இந்தத் தீர்ப்பு வழிவகுக்கும்.

இந்தியாவின் முக்கிய நகரங் களை இணைக்கும் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில் களின் கட்டணத்தை 50 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தி யுள்ளது. இது பரிசோதனை முயற்சி என கூறப்பட்டாலும் நிரந்தரமாக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். பாண்டியன், மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்களுக்கு இந்த புதிய கட்டண முறை விரிவுப்படுத்தப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலையில் ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர் சம்பந்தப் பட்டிருப்பதாக சிபிஐ தெரி வித்துள்ளது. இந்த வழக்கில் ஒளிவுமறைவின்றி நேர்மையான விசாரணை நடத்தி குற்றவாளி களை தண்டிக்க வேண்டும்.

நிதி வழங்க வேண்டும்

ஒருதலைக் காதலுக்கு மேலும் ஒரு இளம்பெண் பலியாகியுள்ளார். அண்மைக் காலத்தில் இது 5-வது பலி. சென்னை சுவாதி, விழுப்பரம் நவீனா, கரூர் சோனாலி, தூத்துக் குடி பிரான்சினாவைத் தொடர்ந்து தற்போது விருத்தாசலத்தில் புஷ்பலதா உயிரிழந்துள்ளார். ஒரு தலைக் காதலுக்கு இளைஞர்கள் விடை கொடுக்க வேண்டும். பலியான பெண்களின் குடும்பத் தினருக்கு தமிழக அரசு விரைவில் நிதி உதவி செய்ய வேண்டும்.

20-ம் நூற்றாண்டின் இணை யற்ற கவிஞர்களில் ஒருவரான மகாகவி பாரதியாரின் ‘குயில் பாட்டு’ தமிழுக்கு கிடைக்க காரணமாக இருந்தது புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள மாந்தோப்பு. எனவே, இந்த இடத்துக்கு ‘பாரதி குயில் தோப்பு’ என பெயரிட வேண்டும் என 1990-ம் ஆண்டு முதல் நண்பர் குமரிஅனந்தன் கோரிக்கை விடுத்து வருகிறார். அவரது இந்த நீண்டகால கோரிக்கை, புதுவை முதல்வர் நாராயணசாமி ஆட்சிக் காலத்திலாவது நிறைவேற வேண்டும் என்பதே எனது ஆசை.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT