உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருந்த கனிமொழி எம்.பி., திங்கள் கிழமை மாலை வீடு திரும்பினார்.
திமுக மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி, திடீர் உடல் நலக்குறைவால் ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை அனுமதிக்கப்பட்டார்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக, நாடாளு மன்றக் கூட்டத்தில் பேசுவதற்காக, இரண்டு நாட்களாகக் கண் விழித்து உரை தயாரிப்புப் பணியில் கனிமொழி ஈடுபட்டிருந்தார்.
தூக்க மின்மையால் அவர் ஞாயிற்றுக் கிழமை உடல் சோர்வானதாகவும், அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கனிமொழி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
திங்கள்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து கனிமொழி வீடு திரும்பினார். இன்னும் சில தினங்களுக்கு முழுமையாக ஓய்வெடுக்க அவருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி யுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.