நான் அரசியலில் இருக்கவே கூடாது என்று நினைத்து பலர் சதி வேலை செய்து வருகின்றனர் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
‘எம்ஜிஆர் - அம்மா - தீபா பேரவை’ என்ற புதிய அமைப்பை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி தீபா தொடங்கினார். இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
அரசியல் பணிகளை தொடங்கு வதற்காகத்தான் பேரவை ஏற்படுத் தப்படுள்ளது. எனது பேரவையின் கொள்கைகள் குறித்தும், பேரவை நிர்வாகிகள் பட்டியலையும் 27-ம் தேதி (இன்று) வெளியிடஉள்ளேன்.
கட்சி என்பதை ஒரு குடும்ப அமைப்பாக நடத்த முடியாது. அதிமுகவின் தலைமையை நான் ஏற்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம். அதற்கு பல தடைகள் ஏற்பட்டன. இதற்கிடையே, யாரும் எதிர்பாராத வகையில் கட்சித் தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார். அதன்பிறகு, குறுகிய காலத்தில் எனது அரசியல் பணிகளை தொடங்கியுள்ளேன்.
தடை, தொந்தரவு
நான் அரசியலில் இருக் கவே கூடாது என்று பலர் சதி வேலைகளை செய்து வருகின்ற னர். அரசியல் பணிகளுக்கு தொந்த ரவு அளித்தும், தடைகளை ஏற் படுத்தியும் வருகின்றனர். இது போன்ற தடைகளை மீறி, தளர்ந்து விடாமல் மக்கள் பணி செய்ய வேண்டும் என வந்துள்ளேன். பெரும்பாலான மக்களின் விருப்பத் தின்படிதான் எனது பேரவைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திடீர் எதிர்ப்பு
எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையின் தற்காலிக செயலா ளர், தலைவர் பதவிகளுக்கு ராஜா மற்றும் சரண்யா என்ற இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் சிலர் நேற்று மதியம் கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம், ‘நிர்வாகிகள் பட்டியல் 27-ம்தேதி தான் (இன்று) முழுமையாக வெளியிடப்படும்’ என்று கூறி தீபா ஆதரவாளர்கள் சமாதானப்படுத்தினர்.