சென்னையில் பொது இடங்களில் மக்களின் பாதுகாப்புக்காக இலவசமாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆர்வம் உள்ளவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை அணு கினால் அனுமதி வழங்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் ரயில் நிலைய பிளாட் பாரத்தில் கடந்த 24-ம் தேதி ஐடி பெண் ஊழியர் சுவாதி மர்ம நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும் மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் பரபரப்பாகக் காணப்படும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமின்றி முதலுதவி சிகிச்சை அளிப்பதற்குக்கூட எந்த வசதியும் இல்லை.
இது தொடர்பாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் கேட்டபோது, “ரயில் நிலையங்களின் பிளாட்பாரத்தில் பொதுமக்களுக்கு தெரியும் இடத்தில் முதலுதவி சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுடன் கூடிய பெட்டிகளை கட்டாயம் வைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். போலீஸ் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும். ரயில் நிலையங்களின் அருகில் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் ஒன்றை நிறுத்தி வைக்க வேண்டும்” என்றனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக் கள் இல்லாததால் குற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீ ஸார் திணறுகின்றனர்.
பாதுகாப்புக்காக பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக் களை தங்கள் சொந்த செலவிலேயே பொருத்த ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வருகின்றன. இதற்கு யாரை அணுகுவது என்று தெரியாமலும், தொடர்ந்து அதிகாரிகள் அலைக்கழிப்பதாலும் முயற்சிகள் கைவிடப்படுகின்றன.
இது தொடர்பாக சென்னை காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பொது இடங்களில் இலவசமாக கண்காணிப்பு கேமராக் களை பொருத்த முன்வருபவர்கள் நேரடியாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தை அணுகலாம். அவர் களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப் படும். போலீஸாரும் உடன் இருப்பார்கள். அதே நேரத்தில் விளம்பரத்துடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பல துறைகளிடம் இருந்து அனு மதியும் வாங்க வேண்டும்” என்றனர்.