தமிழகம்

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு; ஏப். 24 முதல் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடமாறுதல் கோரி ஏப்ரல் 24 முதல் மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் கல்வியாண்டில் (2017-18) அரசு, நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் (முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்) பொது இடமாறுதல் கலந்தாய்வு குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT