தமிழகம்

காவலர்கள் நினைவிடத்தில் டிஜிபி, கமிஷனர் மரியாதை

செய்திப்பிரிவு

மெரினா டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர்கள் நினைவிடத் தில் டிஜிபி ராமானுஜம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உட்பட அதிகாரிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 10 வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்தியா முழுவதும் அன்றைய தினம் 'காவலர்கள் வீர வணக்க நாள்' என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் காவல் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அக்டோபர் 21-ம் தேதி காவலர்கள் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் 653 வீரர்கள் காவல் பணியின்போது உயிரிழந் துள்ளனர். அக்டோபர் 21-ம் தேதியான நேற்றைய தினத்தில், காவல் பணியின்போது உயிர்விட்ட வீரர்களின் செயலை போற்றும் வகையில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள காவலர்கள் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.

தமிழக டிஜிபி ராமானுஜம், ஏடிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட பல போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT