முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறை யீட்டு வழக்கில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க அனுமதிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகி றது. இதில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பு வாதங்களை கேட்க நீதிமன்றம் மறுத்து விட்டதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த வழக்கில் ஏற்கெனவே பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் திலும், கர்நாடக உயர் நீதிமன்றத் திலும் தெரிவிக்கப்படாத விஷயங் கள் இருந்தால் அதை மட்டும் அன்பழகன் தரப்பு எழுத்துப்பூர்வ மாக தாக்கல் செய்தால் போதுமானது என்றும் வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டியுள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பி.வி.ஆச்சார்யா ஆகியோரின் இறுதி வாதமும், சுப்பிரமணியன் சுவாமியின் இறுதி வாதமும் முடிவடைந்துள்ளது. எனவே, மற்றொரு மனுதாரரான அன்பழகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா தனது வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிய நாடெங்கும் உள்ள சட்ட நிபுணர்களும், அரசியல் வாதிகளும், பத்திரிகையாளர் களும், பொதுமக்களும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக் கின்றனர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.