தமிழகம்

சுவாதி கொலையை அரசியலாக்க வேண்டாம்: குஷ்பு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சுவாதி கொலையை அரசியலாக்க வேண்டாம் என்று காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு வேண்டுகோள் விடுத்துள் ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங் களுக்கு முன்பு இளம் பெண் பொறி யாளர் சுவாதி படுகொலை செய்யப் பட்டார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனி வாசன் உள்ளிட்டோர் சூளைமேட் டில் உள்ள சுவாதியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று சுவாதியின் வீட்டுக்குச் சென்ற குஷ்பு, சுவாதி யின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இளம் பெண் சுவாதி கொடூர மாக கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவம் இனியும் நடக்கக்கூடாது என்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் அரசு, காவல் துறைக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பங்குண்டு.

சுவாதியின் படுகொலையை அரசியலாக்க வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள் கிறேன். சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் சுவாதியைப் பற்றி தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமூகத்தின் பங்களிப்பு அவசியம். அநீதிகளைக் கண்டு பொது மக்கள் அமைதியாக இருக்கக் கூடாது.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

SCROLL FOR NEXT