தமிழகம்

மார்ச் 1ம் தேதி இளைஞர்களுக்கான அறிவிப்பை வெளியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம்: கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

செய்திப்பிரிவு

மக்களிடம் நீதி கேட்டு பயணத்தை தொடங்கவுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி இளைஞர்களுக்கான புதிய அறிவிப்பை அவர் வெளியிடுகிறார்.

சசிகலா தலைமையை எதிர்த்து கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார். தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராகியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நீதிகேட்டு மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்தார். பயணத்தை தொடங்கும் முன், மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதன்படி, நேற்று தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது, மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட் டோர் உடன் இருந்தனர். இந்த ஆலோ சனையின்போது, சசிகலா பொதுச் செயலாளரான பிறகு நடந்த நிகழ்வு களையும், முதல்வர் பதவியை ராஜி னாமா செய்ததன் பின்னணியையும் நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் எடுத்துக்கூறினார்.விரைவில் மற்ற மாவட்ட நிர்வாகிகளையும் அவர் சந்தித்து பேசவுள்ளார்.

இதற்கிடையே ஓபிஎஸ்க்கான ஆதரவை அதிகரிக்கும் முயற்சி யில், ஆஸ்பயர் சீனிவாசன் தலைமையிலான தொழில் நுட்ப பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இதற்காக தனி வலைதளத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ‘சப்போர்ட் ஓபிஎஸ்’ என்ற அந்த வலைதள பக்கத் தில் கடந்த 48 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் பேர் இணைந்துள்ளனர். மேலும், 3 புதிய டீசர்களையும் உருவாக்கியுள் ளனர். மேலும், மார்ச் 1-ம் தேதி வரை காத்திருங்கள் என்றும் அதில் கூறப்பட்டுள் ளது. தீபா பேரவையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் நேற்று மாலை இணைந்தனர்.

SCROLL FOR NEXT