தமிழகம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் பத்திரமாக மீட்பு

கிருஷ்ணகுமார்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

விபத்து ஏற்பட்டவுடனேயே மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீ அணைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

அறுவை சிகிச்சை அறைக்கு அருகில் உள்ள இடத்தில் தீ பிடித்தள்ளது. அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு பண்டல்களில் தீ பரவியிருக்கிறது. இதனால் தீ வேகமாக எரிந்து மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. தீ விபத்தால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சம்பவ இடத்தில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT