மக்களவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்துக்காக கேரளத்தில் இருந்து 200 ஜீப்புகளை அதிமுக வாடகைக்கு அமர்த்தியுள்ளது. இவை 39 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலில் தமிழகத் தில் ஐந்துமுனைப் போட்டி நிலவுவ தால், ஒவ்வொரு கட்சியினரும் தங்களது பலத்தை நிரூபிக்க கடுமை யாக போராட வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள னர். இதற்காக நிர்வாகிகளிடம் இருந்த ஜீப் உள்ளிட்ட வாகனங் கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப் பட்டு வருகின்றன. அது தவிர சில உள்ளூர் வாகனங்களும் தேர்தல் பிரச்சாரத்துக்காக நாள் வாட கைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமைச்சர் கள், மாவட்டச் செயலர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், தலை மைக் கழக நிர்வாகிகள், திரைப்பட நட்சத்திரங்கள் என பல்வேறு தரப் பினர் அதிமுகவுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு வசதியாக கேரளத் தில் இருந்து 200 ஜீப்புகள் மாத வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.
கேரள பதிவெண்கள் கொண்ட இந்த ஜீப்புகள் தொகுதிக்கு 5 வீதம் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி களுக்கும் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. சென்னையில் மட்டும் கூடுதல் ஜீப்புகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.ஒவ்வொரு ஜீப்புக்கும் ஒரு பொறுப்பாள ரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், “உள்ளூ ரில் போதுமான அளவுக்கு ஜீப்புகள் இல்லை. இதனால் தலைமைக் கழகத்தில் இருந்து கேரளத்தில் மொத்தமாக 200 ஜீப்புகள் மாத வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன” என்றனர்.