தமிழகம்

அனைத்துக் அரசியல் கட்சிகளும் ஃபேமிலி பிரைவேட் லிமிடெட் ஆகிவிட்டன: சலசலப்பை ஏற்படுத்திய கார்த்தி சிதம்பரத்தின் கருத்து

குள.சண்முகசுந்தரம்

“அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்பங்களுக்குள் கட்டுப்பட்டு ‘ஃபேமிலி பிரைவேட் லிமிடெட்’ ஆகிவிட்டன. அதனால், வலுவான அரசியல் பின்னணி இல்லாமல் யாரும் கட்சிகளில் தலைமை பொறுப்புகளுக்கு வரமுடி யாது” என கார்த்தி சிதம்பரம் தெரிவித்த வெளிப்படையான கருத்து காங் கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

1967-க்கு பிறகு பிறந்த தனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர் களை அழைத்து ‘ஜி67’ என்ற தலைப்பில் கடந்த 2 ஆண்டுகளாக கருத்துக் கூட்டத்தை நடத்தி வரு கிறார் கார்த்தி சிதம்பரம். கடந்த 6-ம் தேதி ஆந்திரா கிளப்பில் நடந்த கூட்டத்தில் ‘1967-க்கு பிறகு தமிழக அரசியல்’ என்ற தலைப் பில் பேசிய அவர், “1967-ல் முதல்வராக இருந்த அண் ணாவை அறிஞர் என்றோம். இப்போது இருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு எடப்பாடி என்று ஊரைத்தான் சொல்ல முடி கிறது.

தேசிய, பிராந்திய கட்சிகள் அனைத்துமே இப்போது குடும்பங் களின் கட்டுப்பாட்டுக்குள் போய் ஃபேமிலி பிரைவேட் லிமிடெட் ஆகிவிட்டதால் கட்சிக்குள் ளும் ஆட்சிக்குள்ளும் விவாதங் கள் நடப்பது இல்லை.

பாஜகவில் மட்டும் ஓரள வுக்கு ஜனநாயகம் இருக் கிறது என்றாலும் அங்கேயும் இரண்டாம் கட்ட தலை வர்கள் குடும்ப அரசியலைத்தான் ஊக்குவிக்கிறார்கள். இதைக் கேட்க உனக்கு என்ன யோக்யதை இருக்கிறது என்று நீங்கள் கேட்ப தும் எனக்கு புரிகிறது. தமிழக அரசியலில் இப்போது ஏற் பட்டிருக்கும் வெற்றிடத்தால் பாரம்பரிய அரசியல் கட்சிகள் வேகமாக சரிவை சந்தித்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசியலுக்கு வந்து ஒன்றரை வருடத்தில் அதிபராகிவிட்டார். அர்விந்த் கேஜ்ரிவால் ஒரே வருடத்தில் டெல்லி முதல்வ ராக வர முடிந்தது. டிரம்ப், கேஜ்ரிவால் பாதையில் ‘ஜி67’ செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

‘அனைத்து அரசியல் கட்சி களும் குடும்ப ஆதிக்கத்தில் இருப்பதாக கார்த்தி தெரிவித்த கருத்து காங்கிரஸையும் சேர்த் துத்தானே’ என காங்கிரஸுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வரும் சிலர், பாஜகவில் ஓரள வுக்கு ஜனநாயகம் இருக் கிறது என்று சொன்னதையும் அவருக்கு எதிராக திருப்பு கிறார்கள்.

இதுகுறித்து கார்த்தி சிதம்பரத் திடம் கேட்டபோது, “புதிய சிந் தனையாளர்களும் சிந்தனை களும் வர வேண்டும் என்பதுதான் அந்தக் கூட்டத் தில் நான் பேசிய மையக் கருத்து. அதைவிடுத்து, ‘காங்கிர ஸில் குடும்ப அரசியல்’ என்று நான் சொன்னதாக திரித்து தகவல் பரப்பக் கூடாது. காங்கிரஸ் என்ற வார்த்தையை நான் உச்சரிக்கவே இல்லை.

நானும் விதிவிலக்கு அல்ல

அனைத்து அரசியல் கட்சி களும் குடும்பங்களின் கட்டுப் பாட்டில் இருக்கின்றன என்று சொன்ன நான், இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறேன். குடும்ப அரசியலால் நான் பாதிக்கப்படவில்லை. அது தான் எனக்கு ஒரு அடையாளத் தைத் தந்திருக்கிறது. குடும்ப அரசி யலால் பலனடைந்த நானேதான் இப்போது இந்தக் கருத்தையும் சொல்கிறேன்.

அதேபோல், பாஜகவை உயர்த்திப் பேச வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை’’ என்று சொன்னார்.

இதனிடையே, கார்த்தியின் கருத்தை காங்கிரஸ் தலைமை யின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT