இன்று உலக மரபுச் சின்னங்கள் நாள்
விருதுநகர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் வரலாற்றுச் சான்றுகளாகக் காணப்படும் கல் மண்டபங்கள் சிதைந்து வருகின் றன. வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தின் தென்பகுதியில் ஆட்சி செய்த மதுரை நாயக்கர் மன்னர்களில் சிறந்து விளங்கிய திருமலை நாயக்கரால் பல இடங் களில் கல் மண்டபங்கள் மற்றும் தங்கும் சத்திரங்கள் கட்டப்பட்டன. மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழி நெடுகிலும் இம் மண்டபங்களைக் காண முடியும்.
அரசவை அதிகாரிகள், பொது மக்கள் நீண்ட நேர பயணத்தின் போது இந்த கல் மண்டபங்களில் தங்கி இளைப்பாறினர். மேலும், திருமலை நாயக்கர் ஆட்சி புரியும் போது, திருவில்லிபுத்தூர் ஆண் டாள் கோயில், குற்றாலநாதர் கோயில் போன்ற கோயில்களில் உச்சிக்கால பூஜை முடிந்த பிறகு மதிய உணவு அருந்துவதை வழக்க மாகக் கொண்டிருந்தார். மதுரை யில் இருக்கும்போது கோயில் களின் பூஜை மணியோசையை அறிந்துகொள்ள, வழிநெடுக கல் மண்டபங்களை அமைத்து மணி களைக் கட்டிவைத்தார். கோயிலில் பூஜை தொடங்கியவுடன் கல் மண்டபங்களில் அமைக்கப்பட்ட மணிகளை வரிசையாக அடுத் தடுத்து ஒலிக்கச் செய்து, பூஜை தொடங்கியதை அறிந்து கொண் டார். இதனால் கல் மண்டபங்கள், மணி மண்டபங்கள் எனவும் அழைக் கப்பட்டன.
ஆனால், தற்போது இவை பெரும்பாலான இடங்களில் சிதைந்து காணப்படுகின்றன. வசிப் பிடங்களுக்கு அருகே உள்ள வரலாற்றுச் சான்றுகளைப் போற்றி பாதுகாக்க தவறியதால், நமது கடந்த கால வரலாற்றை மறந்தும் இழந்தும் வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, விருதுநகர் மாவட் டம், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கோ.கந்த சாமி கூறியதாவது:
நூற்றுக்கும் மேற்பட்ட கல் மண்டபங்களைக் கட்டு வதற்காக கைதேர்ந்த கல் தச்சர் களைக் கொண்டு பல நாட்களாக இம்மண்டபங்கள் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன. தூண்களில் சைவ, வைணவ சமயச் சிற்பங் களும், 64 ஆய கலைகள் பற்றிய உருவங்களும், வாழ்வியல் சிற்பங் களும், புடைப்புச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் கந்தசாமி
திருவிழாக்களின்போது இம் மண்டபங்களில் விருந்துகளும் நடந்துள்ளன. அதோடு மன்னரின் உத்தரவுப்படி அன்னதானம் வழங் கப்பட்டுள்ளன. விசேஷ காலங் களில் ஆன்மிகச் சொற்பொழிவும் நடந்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட கல் மண் டபங்களில் தற்போது ஒருசில மண் டபங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றில் சில மண்டபங்கள் கோயில்களாகக் கட்டப்பட்டு சிறு தெய்வங்கள் வைக்கப்பட்டு வழிபடுகின்றனர். ஒருசில இடங்கள் வியாபாரம் செய்யும் இடங்களாக மாறியுள்ளன. சில கல் மண்டபங்களில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. சில மண்டபங்கள் தூண்கள் சரிந்து விழுந்து முட் புதர்களால் சூழப்பட்டு காட்சி யளிக்கின்றன.
மிகச் சிறப்புமிக்க வரலாற்றைத் தெரிவிக்கும் இக்கல் மண்டபங்கள் பராமரிப்பின்றி அழிந்துவரும் நிலையில் வரலாறும் மறக்கப்பட்டு வருகிறது. இந்த கல் மண்டபங்கள் அமைந்துள்ள பகுதியிலேயே பழங் காலத்தில் வழித்தடங்கள் அமையப் பெற்றுள்ளன.
கட்டிடக் கலையின்மீது பேரார்வம் கொண்ட திருமலைநாயக்கர், கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த சிற்பி ஒருவனுக்கு தன் கையால் வெற்றிலை மடித்துத் தந்ததாக வும் வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே, நம் கண் முன்னே அழிந்துவரும் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும்.
வரலாற்று சான்றுகளைப் பாது காத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டும். பிற்கால சந்ததியினருக்கு மரபார்ந்த செல்வங்களாக விட்டுச் செல்வதே மரபுச்செல்வங்கள். இந்த கல் மண்டபங்களும் மரபுச் செல்வங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. இந்த மரபுச் செல்வங்கள் அழிந்து விடாமல் காப்பாற்ற இந்திய கலைப் பொருட்கள் மற்றும் மரபுச் சின்னங் கள் காப்புச் சட்டம் கடைபிடிக் கப்பட்டு வருகிறது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்.18-ம் நாளினை உலக மரபுச் செல்வங்கள் நாள் என பன்னாட்டு கல்வி, அறிவியல் காப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தி உலகம் முழுவ தும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றார்.