வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். ஆவின் கேட் பகுதியி்ல் இருந்து எம்பிஏ கேட் வரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம்(எம்.ஹெச்.ஏ.ஏ) மற்றும் பெண் வழக்கறிஞர் சங்கம், லா அசோசியேஷன் சார்பில் நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதன்தொடர்ச்சியாக இன்று ஆவின் பாலகம் அருகே கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளனர்.