தாம்பரத்தை அடுத்து உள்ள அகரம்தென் கிராமத்தில் இருந்து வேங்கடமங்கலம் செல்லும் சாலை, கடந்த ஓராண்டாக சேதமடைந்து குண்டும், குழியுமாகக் உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த வழியில் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வரும் நிலையில் சேதமான இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என, அந்தப் பகுதி பொதுமக்கள் பல முறை புனித தோமையார் மலை ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
‘மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அடிக்கடி இந்த சாலையில் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இந்த சாலை போடப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. 5 ஆண்டு வரை சாலையை போட்ட ஒப்பந்ததாரர் பராமரிக்க வேண்டும் என ஒப்பந்த விதியில் உள்ளது.
எனவே, சேதமடைந்த இந்த சாலையை உடனடியாக சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.