நீட் தேர்வில் தமிழகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது வெட்கக்கேடானது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
1952-ல் இந்தியாவில் இந்தியை பொதுமொழியாக்க முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால், அப்போதைய பிரதமர் நேரு, தமிழகத்தில் இந்தி தெரிந்த பின்னரே அதை செயல்படுத்துவோம் என்றார். அவர் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் இந்தி தெரியவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது வெட்கக்கேடானது. பின்தங்கிய மாநிலமான பிஹார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நீட் தேர்வு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக கல்வித் துறையில் கொண்டுவந்த மாற்றமானது, மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் அளவில் இருக்க வேண்டும் என்றார்.