மொத்தம் 25 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் 57 சென்னை பள்ளிகளில் 157 குடிநீர் குழாய்களே இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளி களான சென்னைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றம்சாட்டி, புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி யினர் கடந்த ஜனவரி 13-ம் தேதி ரிப்பன் மாளிகையில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக, புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி யினரும், மாநகராட்சி கல்வி அதி காரிகளும் இணைந்து அடிப்படை வசதிகள் தொடர்பாக, சென்னைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடி வெடுத்தது.
இதன்படி, கடந்த ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சியின் 10 மண்டல கல்வி அதிகாரிகள், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 40 பேர் என 50 பேர் கொண்ட குழுவினர் சென்னைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்
இந்த ஆய்வு தொடர்பாக 24 பக்க விரிவான ஆய்வறிக்கையை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன் னணியைச் சேர்ந்த பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை மேயரை சந்தித்து அளித்தனர்.
ஆய்வுக் குறித்து, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி யின் சென்னை மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராஜா தெரிவித்த தாவது:
சென்னையில் உள்ள 284 சென்னைப் பள்ளிகளில் ஏழை-எளிய குடும்பத்தைச் சேர்ந்த 86 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.
திருவொற்றியூர், பெரம்பூர்- வியாசர்பாடி, வண்ணாரப் பேட்டை, திரு.வி.க.நகர், கோயம் பேடு, புரசைவாக்கம்- நுங்கம் பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, அடையாறு ஆகிய சென்னை மாநகராட்சியின் 10 கல்வி மண் டலங்களில் 57 சென்னைப் பள்ளி களில் அடிப்படை வசதிகள் தொடர் பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.
25 ஆயிரத்து 90 மாணவர்கள் படிக்கும் அப்பள்ளிகளுக்கு அரசின் விதிப்படி, 20 மாணவர் களுக்கு ஒரு குடிநீர் குழாய் வீதம் 1,255 குடிநீர் குழாய்கள் இருக்க வேண்டும். ஆனால், 157 குடிநீர் குழாய்கள் மட்டுமே உள்ளன. அதேபோல், 50 பேருக்கு ஒரு கழிப்பறை என 502 கழிப்பறைகள் இருப்பதற்கு பதில் 367 கழிப்பறைகள்தான் உள்ளன என்பதும், அந்த கழிப்பறைகளும் பராமரிக்கப் படாமல் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 57 பள்ளி களுக்குத் தேவையான 1,255 சிறுநீர் கழிப்பிடங்களுக்கு பதில் 134 சிறுநீர் கழிப்பிடங்கள்தான் இருக்கின்றன. சில பள்ளிகளில் சிறுநீர் கழிப்பிடங்களே இல்லை என்பதும், பெரும்பாலான பள்ளி களில் துப்புரவுப் பணியாளர்கள் நிரந்தரமாக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சானிடரி நாப்கினை மக்கச் செய்கிற வசதி கொண்ட பெண் களுக்கான பிரத்யேக கழிப் பறைகள் ஒரு பள்ளியை தவிர மற்ற பள்ளிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பல பள்ளி களில் போதிய ஆசிரியர்கள் இல்லா ததும், இரவு நேர காவலர்கள் இல்லாததும் தெரியவந்துள்ளது.
மணலி புதுநகர்- சடையங் குப்பம், கொருக்குப்பேட்டை- அரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதி களில் உள்ள பள்ளிகளின் கட் டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்.
சென்னை பள்ளிகள் குறித்த ஆய்வறிக்கையை பெற்றுக் கொண்ட மேயர் சைதை துரை சாமி, அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.