சென்னை ஏழுகிணறு பகுதியில் காலாவதியான சாக்லேட்கள் மீது தேதியை மாற்றி அச்சடிப்பதாக அப்பகுதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஆய்வாளர் ஆதிமூலம் தலைமையி லான போலீஸார் சோதனை நடத்தியதில் சவுகார்பேட்டை இருசப்பன் தெருவில் உள்ள பிரைட் பிரிண்டர்ஸ் என்ற அச்சகத்தில் போலீஸார் நடத்திய விசாரணை யில், ஒரு மாதத்துக்குள் காலாவ தியாகும் சாக்லேட்கள் மீதுள்ள உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை அழித்து விட்டு, அதன்மீது, அடுத்த 9 மாதத்துக்கு நீட்டித்த காலாவதி தேதியை அச்சடித்து விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காலாவதி தேதியை மாற்றிய அச்சகத்தின் உரிமையாளர்கள் சந்திரசேகரன் (61), அவரது மகன்கள் குப்பு சாமி (34), மோகன் (28) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சவு கார்பேட்டை ரெட்டிராமன் தெரு வில் வசிக்கும் தேவிலால்என்பவர் சாக்லேட்களின் தேதியை மாற்றி அச்சடிக்க கொடுத்தது தெரிந்தது. தற்போது அவரும் அவரது மகன்கள் பிர காஷ், தீபக்ராஜ், திலீப் தலைமறைவாகிவிட்டனர்.