தமிழகம்

நேரு குடும்பத்தைச் சேராதவரை காங்கிரஸ் தலைவராக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

நேரு குடும்பத்தைச் சேராதவரை காங்கிரஸ் தலைவராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஏதேனும் ஒரு நாள் நேரு குடும்பத்தைச் சேராதவரும் காங்கிரஸின் தலைவராக முடியும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து சென்னையில் ஜி.கே.வாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வாசன், "நேரு குடும்பத்தைச் சேராதவரை காங்கிரஸ் தலைவராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். அப்படி ஒரு எண்ணம் காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் இல்லை" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் 2015-ல் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அண்மையில் அக்கட்சி தேர்தல் தோல்விகள் அடிப்படையில், நேரு குடும்பத்தைச் சேராதவரை காங்கிரஸ் தலைவராக வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT