உள்ளாட்சித் தேர்தலில் திமுகவு டன் கூட்டணி அமைத்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு நேர்ந்ததே தமாகாவுக்கும் நடக்கும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித் துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமாகா மாவட்டத் தலைவர்கள் கூட்டம் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிரமாக ஆலோசிக் கப்பட்டு வருகிறது. இக்கூட் டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள் பலர் உள்ளாட்சி யில் தனித்து நிற்பதே நல்லது என்று கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமாகா மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஒருவர் கூறும் போது, ‘‘உள்ளாட்சித் தேர்தலுக்கு தமாகாவினரை தயார்ப்படுத்தும் பொருட்டு மாவட்டத் தலைவர்கள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தேர்தல் நிதி வசூல் தொடர்பான வரவு, செலவுக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்டத் தலைவர்களை ஜி.கே.வாசன் அறிவுறுத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில், ‘உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து பேசிய தமாகா நிர்வாகிகள், தமாகாவின் மூத்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அதிமுகவுக்கு செல்வதால், அக்கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டாம். அதே நேரத்தில் திமுகவுடன் இணைந்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு நேர்ந்த நிலை தான் தமாகாவுக்கு நேரும்.
எனவே, உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்தித்து பலத்தை நிரூபித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து யோசிக்கலாம்’ என்று சில மூத்த நிர்வாகிகள் வாசனுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
தனித்துப் போட்டியிட்டே வெற்றிப் பெறக் கூடிய அளவுக்கு தமாகாவினர் உழைத்து வருகின்றனர். கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதுபற்றி பின்னர் முடிவெடுப்போம் என வாசன் அக் கூட்டத்தில் குறிப்பி்ட்டதாக தெரிகிறது.