தமிழகம்

பேட்டரியில் மின் கசிவு ஓடும் காரில் தீ விபத்து

செய்திப்பிரிவு

சென்னை கோடம்பாக்கத்தில் ஓடும் காரில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது தொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரி பெருமாள் கூறும்போது, ‘‘ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் வளசரவாக்கத்தைச் சேர்ந்த பார்த்திபன், நேற்று பணி முடிந்து வீடுக்கு காரில் சென்றார்.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செல்லும்போது காரின் முன்பகுதியில் திடீரென புகை வந்தது. கீழே இறங்கி பார்த்த அவர், தொடர்ந்து புகை அதிகமானதால் தீயணைப்பு துறைக்கு புகார் தெரிவித்தார்.

அசோக்நகர், தேனாம்பேட்டை நிலையங்களில் இருந்து 2 வாகனங் களில் சென்று தீயை அணைத்தோம். இன்ஜின், இருக்கைகள், 2 டயர்கள் எரிந்து நாசமாயின. பேட்டரி மின் கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’’ என்றார். விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT