காஞ்சிபுரத்தில் நாளை நடை பெறும் காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெற்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை யொட்டி பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பல நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நகராட்சி பேருந்து நிலையம் தவிர ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் ஆகிய இடங்களில் தற்காலிக மாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து வரும் பேருந்துகள் முத்தியால்பேட்டை, களியனூர், வையாவூர் வழியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை அடைய லாம். சென்னை, பெரும்புதூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் பேருந்துகளும் தாமால்வார் தெரு வழியாக பேருந்து நிலை யத்தை அடையலாம். வந்தவாசி, செய்யார், உத்தரமேரூர் பேருந்து கள் காஞ்சிபுரம் காவலான் கேட் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை வந்தடைய வேண்டும்.
ஆண்டர்ஸன் மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம், மரிய ஆக்ஸிலியம் பள்ளி மைதானம், ஏ.கே.பி சமூகக் கூடம், பழைய ரயில்வே நிலைய குடோன், அன்னை அஞ்சுகம் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்கு வரும் பொது மக்கள் தெற்கு வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர். வடக்கு வாசல் வழியாக வெளியேறலாம். ஒரு முறை வெளியேறிவிட்டால் மீண்டும் தெற்கு வாசல் வழியா கத் தான் உள்ளே வர வேண்டும்.
மேலும் 3 இடங்களில் மருத்துவ முகாம்கள், அன்னதானம் ஆகிய வைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. 100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகள், ராஜவீதிகள், பேருந்து நிலையம் மற்றும் சங்கர மடம் அருகில் 10 இடங்களில் எல்இடி திரை மூலம் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப் படும். ஒருங்கிணைப்பு அலுவலர் களாக வருவாய் துறை அலுவலர் கள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் பணியில் முழு மையாக ஈடுபடுத்தப்பட்டு பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் கண்காணிக்க பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.
அவசர உதவிக்கு 044-27237107, 044-27237207 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு கூறியுள்ளார்.