தமிழகம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை தேவை: மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங் களை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் நக்மா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மகளிர் காங்கிரஸ் நிர் வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடை பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும், தமிழகத்தில் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடு வது, மத்திய பாஜக அரசுக்கு எதி ராக மக்களிடம் பிரச்சாரம் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நிருபர்களிடம் நக்மா கூறியதாவது:

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள் ளன. இளம் பெண்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதி ராக அவதூறுகள் பரப்பப்படு கின்றன. மகளிர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெண் களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தயாராக இருக்க வேண்டும்

உள்ளாட்சித் தேர்தலில் காங் கிரஸ் சார்பில் போட்டியிட அதிக அளவு பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளதால் தேர்தலில் போட்டியிட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா வருகிறது. மகளிர் காங்கிரஸ் சார்பில் இதை சிறப்பாக கொண்டாட இருக்கிறோம். தமிழக காங்கிரஸ் விவகாரங்கள் அனைத் தும் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு தெரியும். எனவே, விரைவில் புதிய தலைவரை மேலிடம் அறிவிக்கும்.

இவ்வாறு நக்மா கூறினார்.

தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி உள்ளிட் டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT