ஒரே கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
விருத்தாசலம் அருகில் உள்ளது எடச்சித்தூர் கிராமம். இந்த கிராமத் தைச் சேர்ந்த ராயர் மகன் கார்த் திக்(10), மூர்த்தி மகன் வெற்றி வேல்(10), சக்திவேல் மகன் குமர வேல்(10). இவர்கள் 3 பேரும் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற சிறுவர்கள் அதே கிராமத்தில் உள்ள ஐயனார் கோயில் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்வதாகக் கூறிவிட்டு பிற்பகல் பள்ளியில் இருந்து சென்றுள்ளனர். திருவிழா முடிந்து மாலை வெகு நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் மங்கலம்பேட்டை காவல் நிலையத் தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை எடச்சித்தூர் கிராம ஏரிப் பகுதிக்கு அப்பகுதி மக்கள் சென்றுள்ளனர். அப்போது ஏரியில், அந்த 3 சிறுவர் களின் சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்சியடைந்தனர். உடனே சிறுவர்களின் பெற்றோர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த னர். உடல்களை மீட்ட போலீஸார் விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேதப் பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.
ஏரியில் குளித்தபோது 3 பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.