தீன தயாளன் கூட்டாளியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 102 கற் சிலைகள் சென்னை எழும்பூர் அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
தமிழக கோயில்களில் இருந்து பழங்கால சிலைகளைக் கடத்தி வெளிநாடுகளில் விற்பனை செய்த வழக்கில், சென்னை ஆழ்வார் பேட்டையில் வசித்த தீன தயாளன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரது வீட்டில் இருந்து ஏராளமான சிலைகள், பழங்கால ஓவியங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக அடுத்தடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், தீன தயாளனின் கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு தீன தயாளனின் மற்றொரு கூட்டாளியான மாமல்லபுரம் நரசிம்மனிடமிருந்து 102 கற்சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். அந்த சிலைகள் தற்போது எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.