தமிழகம்

சென்னை மாநகராட்சி சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்: மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

யூபிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை சென்னை மாநகராட்சி நடத்துகிறது. இதை மேயர் சைதை துரைசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகரில் படித்த, ஏழை எளிய பட்டாதாரி இளைஞர்கள், உயர் கல்வி படிப்பதற்கான போட்டித் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புக் கான யூபிஎஸ்சி போட்டித் தேர்வுகள் ஆகியவற்றுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

இவர்களைப் போட்டித் தேர்வுக ளுக்குத் தயார்படுத்தும் பயிற்சிகள் சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா, செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில்நேற்று தொடங்கியது. இவ்விழாவில் மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்டு, பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் ஆணையர் தா.கார்த்திகேயன், மத்திய வட்டார துணை ஆணையர் சுபோத்குமார், மாநகராட்சி மண்டலக் குழு தலை வர்கள் எல்ஐசி மாணிக்கம், ஏ.இ.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT