தமிழகம்

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப் பெறுக: சரத்குமார்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான வாட் வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தி இருப்பதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.78-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.76-ம் உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக உயரும்.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் வாட் வரியை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை அரசு விளக்க வேண்டும். தமிழக மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான வாட் வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT