மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்வுக்காக சேவையாற்றி வரும் ஸ்கார்ப் தொண்டு நிறுவன ஆலோசகர் எம்.சாரதா மேனனுக்கு இந்தாண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை அறிவி யல், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கவுரவப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஒரு பெண்ணை தேர்வு செய்து சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அவ்வையார் விருது’ வழங்கப்படு கிறது. இந்த விருது பெறுபவருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை வழங்கப்படுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த விருது மகளிர் தினத்தையொட்டி வழங்கப் படுகிறது.
இந்தாண்டுக்கான அவ்வை யார் விருதை நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக சேவையாற்றி வரும் அரசு மனநல மருத்துவ மனை முன்னாள் தலைவரும், ஸ்கார்ப் தொண்டு நிறுவன நிறு வனர் மற்றும் ஆலோசகருமான டாக்டர் எம்.சாரதா மேனனுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
டாக்டர் எம்.சாரதா மேனன், 3 ஆண்டுகள் படிக்க வேண்டிய மனோதத்துவ நிபுணர் படிப்பை 2 ஆண்டுகளில் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முடித்து, மருத்துவக் கல்லூரியில் எம்டி முடித்தார். நாட்டிலேயே முதல் பெண் மனநல மருத்துவரான இவர், பத்ம பூஷண் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 1961-ல் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த்தில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். அவரது தலைமையில் மருத்துவமனையின் ஆய்வுக் கூடம், கட்டிட அமைப்பு களை மேம்படுத்தினார். நோயா ளிகளுக்கு புதிய தொழில்பயிற்சி அளித்ததுடன், அவர்கள் செய்யும் கைவினைப் பொருட்களை கண்காட்சியில் வைத்து மருத்து வமனைக்கு நிதி திரட்டியுள்ளார்.
கடந்த 1984-ல் ஸ்கார்ப் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, மன நோயாளிகளுக்கு தற்காலிக தங்கும் வசதி, மேம்படுத்தப்பட்ட மனநல சிகிச்சை முறைகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி அளித்து வருகிறார். தற்போது எம்.சாரதா மேனனின் சேவையை பாராட்டி ‘அவ்வையார் விருது’ தமிழக அரசால் கடந்த மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. விருதை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
அப்போது, முதல்வர் ஜெய லலிதா, ‘‘நீங்கள் இந்த விருதை பெற்றுக் கொள்வதில் நாங்கள் பெருமையடைகிறோம். நல்ல ஆரோக்கியத்துடன் இன் னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, பொதுமக்களுக்கு சேவை செய்ய இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் என நான் நம்புகிறேன்’’ என்றார்.
விருதை ஏற்றுக் கொண்ட டாக்டர் சாரதா மேனன், முதல் வர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது:
தமிழகத்தின் இந்த பெருமை மிக்க அவ்வையார் விருதுக்கு என்னை தேர்வு செய்ததற்கு நான் உங்களுக்கு (முதல்வர் ஜெய லலிதா) கடமைப்பட்டுள்ளேன். மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறீர்கள். கடந்த 1995-ல் ஸ்கார்ப் இந்தியா நிறுவனத்துக்கு பல்வேறு உதவிகளை வழங்கி யதால் இன்று நிறுவனம் நன்கு வளர்ந்துள்ளது. தங்களது அறிவிப்பின் மூலம் இதர மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கும் அதே வாய்ப்புகள் மனநலம் பாதிக்கப்பட் டவர்களுக்கும் தற்போது வழங் கப்பட்டு வருகிறது. சமூகத்தின் பரிதாபத்துக்குரிய இவர்களுக் காக பல வசதி வாய்ப்புகள், சலுகை கள் வழங்கப்பட்டு வருகின்றன. உங்கள் பெருந்தன்மையான செயல்பாடுகள் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவர்களின் குடும்பங்கள், சேவை வழங்குவோருக்கு சிறந்த எதிர் காலத்தை உருவாக்கி தந்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், சமூக நலத்துறை செயலர் க.மணிவாசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.