முருகன் - ஜிப்மர் பாதுகாப்புக் குழுத் தலைவர், புதுச்சேரி.
ஜிப்மரைத் தன்னாட்சி நிறுவனமாக மாற்ற 2006-ல் அன்புமணி முயற்சியைத் தொடங்கினார். 2008-ம் ஆண்டு அது மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டு, அந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி முதல் தன்னாட்சி பெற்ற நிறுவனமானது ஜிப்மர்.
அதன் பின்னர், ஜிப்மர் ஊழியர் பிரச்சினைகள் அதிகரித்தன. இலவச மருத்துவம் மற்றும் தினக்கூலி ஊழியர் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியானது. 15 ஆண்டுகளாகப் பணியாற்றும் சுமார் 800 தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரத்துக்காகப் போராடுகின்றனர். தற்போது நிரப்பப்படும் பணியாளர்களை புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பக் கோரினால், அதை மறுத்து அகில இந்திய அளவில் தேர்வு நடத்தியுள்ளனர்.
அதிலும் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்தோருக்கு வேலைவாய்ப்பில் உரிய ஒதுக்கீடு தரப்படுவதில்லை. டாக்டர்கள் வேறு மாநிலத்தவர் என்றாலும், கீழேயுள்ள பணியாளர்களுக்கும் தமிழ் தெரியவில்லை. இதனால் நோயாளிகள் அவதியுறுகின்றனர். ஏழைகளுக்கு இலவசச் சிகிச்சை அளித்துவந்த இங்கு தற்போது சிகிச்சைக்குக் கட்டணம் வசூலிக்கின்றனர். ஜிப்மரைக் காப்பாற்றி, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.