தமிழகம்

சாலை விபத்துகளை குறைக்க 18 யோசனைகள்: நெடுஞ்சாலைத்துறை அமல்படுத்த பரிந்துரை

கி.மகாராஜன்

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க ‘எஸ்’ வடிவத்தில் வடிகால் பாதை அமைப்பது, ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் நடமாடும் பழுது நீக்கும் வாகனம், நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனம் உட்பட 18 யோசனைகளை அமல்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துகளிலும், அதில் உயிரிழப்போர், காயமடைந்தோர் பட்டியலிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெரும்பாலான விபத்துகள் சாலைகளை மனிதர்கள், பிராணிகள் கடப்பது, பழுது அல்லது ஓய்வுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் வாக னங்கள் மீது மோதுவது, போதையில் வாகனங்களை இயக்குதல் போன்ற பல்வேறு காரணங்க ளால் நடைபெறுகின்றன.

மழையின்போது தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க கொஞ்சம் சாய்வாக அமைக்கப்பட்டிருககும். உயர்வான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு நீர்வடிய வசதியாக சென்டர் மீடியனில் வடிகால் பாதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த வடிகால் பாதை 0.5 மீட்டர் அகலம் கொண்டதாக, 10 மீட்டருக்கு ஒன்று வீதம் அமைக்கப்படும். ஆனால், மழை நீர் செல்வதற்காக அமைக்கப்படும் வடிகால் பாதையை, சில வாகன ஓட்டிகள் சாலையை வாகனங்களுடன் கடந்து செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற விதிமீறல்களை தடுக்கவும், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்கவும் 18 விதமான திட்டங்களை நிறைவேற்ற நெடுஞ்சாலைத்துறைக்கு மதுரை மைய வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன் பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

‘எஸ்’ வடிவத்தில் வடிகால் பாதையை அமைக்கும்போது, அதன் வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. வனப்பகுதியில் நெடுஞ்சாலையின் இடது மற்றும் வலது புறங்களில் இரும்பு வேலிகளை அமைக்கும்போது, விலங்குகள் குறுக்கீடு காரணமாக விபத்துகள் நடைபெறுவதை தடுக்க முடியும்.

அணுகுசாலையில் இருந்து வரும் வாகனங்களின் வேகத் தைக் குறைக்க, தேசிய நெடுஞ் சாலை சந்திக்கும் இடத்தில் வேகத்தடையை அமைக்க லாம். நேரான சாலைகளில் பல்வேறு இடங்களில் கேமராக் களை பொருத்தி, வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கலாம். அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிக ளில் அபராதம் வசூலிக்கலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பழுதடையும் வாகனங்களை சரி செய்ய, ஒவ்வொரு சுங்கச்சாவடி யிலும் நடமாடும் பழுது நீக்கும் வாகனத்தை நிறுத்தலாம். இந்த வாகனத்தை தொடர்புகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கலாம். விபத்தில் காயமடை வோருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக, ஒவ் வொரு சுங்கச்சாவடி கட்டுப்பாட்டி லும் ஒரு நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனம், வாகன ஓய்விடங்களில் ஏற்படும் திருட்டு சம்பவங்களை தடுக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க, தற்போது சுங்கச்சாவ டியின் ஓரங்களில் அமைத்திருக்கும் எடைமேடையை கட்டணம் வசூலிக்கும் மையங்களுக்கு முன்பே அமைப்பது, சோதனைச் சாவடிகளில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங் கள், விதி மீறல்களுக்கான தண் டனைகள், அபராதங்கள் குறித்த ஒலி நாடாவை ஒலிபரப்பச் செய்வது, தேசிய நெடுஞ் சாலைத்துறை சாலை பாது காப்பு பற்றி செய்திகளை ஒலி பரப்ப தனி பண்பலை வானொலி தொடங்குவது, ஓட்டுநர் கள் மது அருந்தியுள்ளார்களா என சுங்கச்சாவடியிலேயே சோதனை செய்வது, ஓட்டுநர்களுக்கு புத் தாக்க பயிற்சி அளிப்பது போன்ற திட்டங்களை நெடுஞ்சாலைத் துறை செயல்படுத்த வேண்டும். இந்த திட்டங்களால் விபத்துகள் பெருமளவில் குறையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT