தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இன்று (வியாழக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஏற்காடு இடைத்தேர்தல் வரும் டிச. 4ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து 32 அமைச்சர்கள் உள்பட 61 தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வருகிறார். இதை முன்னிட்டு சேலம் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலம் அயோத்தியாப்பட்டணம், பேளூர், மின்னாம்பள்ளி, வாழப்பாடி, உடையாப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி, வலசையூர் உள்பட ஒன்பது இடங்களில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் ஜெயலலிதா மாலை வரை பிரச்சாரம் செய்துவிட்டு, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.