சென்னை - கீழ்ப்பாக்கத்தின் ஆம்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் உள்ள வீட்டில், மதியம் 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ, ஆறு மற்றும் 7-வது மாடிக்கும் பரவியது.
அந்த 10 மாடி குடியிருப்பில் குடியிருந்த குடும்பத்தினர் அனைவரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர், உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.
வீட்டின் ஏ.சி. மெஷினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.