தமிழகம்

விதிமீறல் கட்டிடங்களை இடிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னையில் விதிமீறல் கட்டிடங் களை இடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலி யுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: சென்னை தியாகரா யர் நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இன்று (நேற்று) அதிகாலை ஏற்பட்ட தீயை 10 மணி நேரத்திற்கு மேலாகியும் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள கட்டிடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. வழக்கமாக பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டப்படும்போது அதன் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீத திறந்தவெளிப் பரப்பாக ஒதுக்கப்பட வேண்டும். அதுமட்டு மின்றி, பல அடுக்குமாடிக் கட்டிடங் கள் கட்டப்படும்போது சாலையி லிருந்து குறைந்தபட்சம் 6 மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் கட்டிடம் கட்டப்பட வேண்டும். அத்துடன், பக்கவாட்டில் தீய விப்பு வாகனங்கள் சென்று வர வசதியாக குறைந்தபட்சம் 20 அடி அகலத்திற்கு பாதைக்காக நிலம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இந்த விதிகள் எதுவும் கடை பிடிக்கப்படவில்லை. இவ்வளவு விதிமீறல்களுக்குப் பிறகும் சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அனைத்துத் துறைகளும் அனுமதி அளித்ததன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு சென்னை தியாகராயர் நகரில் ஒரு கடையில் ஏற்பட்ட பயங்கர தீயையும் அவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதற்குக் காரணமும் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதுதான். சென்னையில் ஏராளமான கட்டி டங்கள் இப்படித்தான் எந்த விதி களையும் பின்பற்றாமல் கட்டப் பட்டிருக்கின்றன. தியாகராயர் நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டி டங்களில் வணிக நேரத்தின்போது ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும். சென்னையிலுள்ள விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத் துவது என்பது ஊழலுக்கு வழி வகுக்கும். மாறாக, அவற்றை இடித்து விட்டு விதிகளுக்குட்பட்டு கட்டுவதுதான் சரியானதாக இருக் கும். அப்போது இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படும்போது சேதத்தையும், உயிரிழப்புகளை யும் தடுக்க முடியும். எனவே, சென்னை சில்க்ஸ் தீ விபத்தை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT