தமிழகம்

அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் குறித்து பரிந்துரைக்க அதிகாரிகள் குழு

செய்திப்பிரிவு

அரசு அலுவலர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு 1-7-2016 முதல் மேலும் 4 ஆண்டு களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் வரை சிகிச்சை பெற வகை செய்கிறது. சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும் உச்சவரம்புத் தொகை ரூ.7 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அனைத்து அம்சங்களுக்கும் மத்திய அரசு முழுமையாக ஒப்புதல் அளித்த பின்னர், அவற்றை ஆய்வு செய்து தமிழக அரசு அலுவலர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத் துவது குறித்து தகுந்த பரிந்துரை களை அளிக்க உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்படும்.

நாட்டிலேயே முதல்முறை யாக 7 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட் டத்தை செயல்படுத்தியதில் அரசு பெருமிதம் கொள்கிறது. இந்த திட்டத்துக்காக ரூ.129 கோடியும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்களுக்காக ரூ.18,868 கோடி யும் ஒதுக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT