தமிழகம்

இடைநீக்கம் செய்யப்படாத திமுக உறுப்பினர்கள் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி

செய்திப்பிரிவு

இடைநீக்கம் செய்யப்படாத திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 79 திமுக எம்எல்ஏ-க்கள் பேரவை வளாகத் தில் நேற்று மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

எதிர்க்கட்சிகளை கேலி, கிண் டல் செய்யாமல், மக்கள் பிரச்சி னைகளை மட்டும் பேச வேண்டும். ஒரு சட்டப்பேரவை எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு அடையாள மாக மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒரு மணி நேரம் நடத்திக் காட்டியிருக்கிறோம்.

திமுக எம்எல்ஏ-க்கள் 79 பேரை பேரவைத் தலைவர் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்துள்ளார். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இடைநீக்கம் செய்யப்படாத திமுக உறுப்பினர்களும், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் விடுத்த கோரிக்கையை பேரவைத் தலைவர் ஏற்க மறுத்துள்ளார்.

பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குள் செல்வதற்கு கூட எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர்கள் மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்தால் மட்டுமே யார் தவறு செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். இந்த மாதிரி சட்டப்பேரவைக் கூட்டம் கூட தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. எனவே, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும்.

காவல்துறை மானியக் கோரிக் கையில் திமுகவினர் கலந்துகொள் ளக் கூடாது என்பதற்காகவே திட்ட மிட்டு எங்களை இடைநீக்கம் செய்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர் கள் மீது இடைநீக்கம் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, முதல்வராக இருந்த கருணாநிதி அதனை ரத்து செய்ய வைத்துள் ளார். அதுபோன்ற பெருந்தன் மையை இப்போது எதிர்பார்க்க முடியாது.

திமுக உறுப்பினர்கள் மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய் யக்கோரி சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோ சித்து முடிவு செய்வோம். இடை நீக்கம் செய்யப்படாத திமுக உறுப் பினர்கள் சட்டப்பேரவை நடவடிக் கைகளில் வழக்கம்போல பங்கேற் பார்கள் என்றார் மு.க.ஸ்டாலின்.

SCROLL FOR NEXT