ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து கிறிஸ்டினா சாமி நீக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியாகியது. இதற்கு கிறிஸ்டினா சாமி இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக கூறுவது எந்த அடிப்படையும் இல்லாமல் வெளியான தவறான தகவல். எனக்கு தேசிய குழு வழங்கியுள்ள மாநில ஒருங்கிணைப்பாளர் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் செய்யும் பிரச்சாரம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.