தமிழகம்

ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம்: ரூ.25 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி

செய்திப்பிரிவு

சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான வசதியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று தொடங்கி வைத்தார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில், கிண்டி மற்றும் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் அபூர்வ தாவரங் கள் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்.

நாட்டிலேயே, குடியரசுத் தலைவர் மாளிகையின் ஒரு பகுதி மற்றும் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையை மட்டுமே பொதுமக்கள் பார்வையிட முடியும்.அந்த வரிசையில் தமிழக ஆளுநர் மாளிகையும் இணைந்துள்ளது. ஆளுநர் மாளிகையை பார்வையிட விரும்பும் பொதுமக்கள், முதலில் ஆன்லைனில் ,‘ www.tnrajbhavan.gov.in’ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஒருவருக்கு ரூ.25 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரை பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் வரும் போது ராஜ்பவன் அனுமதி சீட்டு, அசல் அடையாள சான்று எடுத்து வரவேண்டும். பார்வையாளர்கள் பேட்டரி யால் இயங்கும் கார் மூலம், புல்வெளி பகுதி, மான்கள் உலவும் பகுதி, தர்பார் அரங்கம், மூலிகை வனம் உள்ளிட்ட 12 பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

SCROLL FOR NEXT