தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருட்களை விற்ற 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா என்ற போதை புகையிலைப் பொருட்கள், இதர புகையிலைப் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் போதை பாக்குகளை தயாரிப்ப வர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களைக் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், வில்லிவாக்கம், கோயம்பேடு, குன்றத்தூர், மாங் காடு, எஸ்.ஆர்.எம்.சி. , திருவேற் காடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, முத்தாப் புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 46 பேர் கைது செய்யப் பட்டனர்.