தமிழகம்

வங்கக் கடலில் மீண்டும் புயல்: மாதி என பெயர்

செய்திப்பிரிவு

தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. அதற்கு 'மாதி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பின் உருவாகியுள்ள 4-வது புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய 3 புயல்களுக்கும் 'பைலின்', 'ஹெலன்', 'லெஹர்' என பெயரிடப்பட்டிருந்தது. இந்தப் புயல்களால் ஒடிசா, ஆந்திரம் மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

'மாதி' புயல், வங்கக்கடலில் இலங்கையின் திரிகோணமலைக்கு வடகிழக்கே 370 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 500 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

'மாதி' புயலால் அந்தமான்-நிகோபார் தீவுகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்றும் தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT